Connect with us

இந்திய செய்திகள்

காதலியை கைவிட்ட ஆசிரியரை கடத்திச்சென்று திருமணம்!

Published

on

 நான்கு வருடங்கள் காதலித்த பெண்ணை ஏமாற்றிய ஆசிரியரை துப்பாக்கி முனையில் கடத்தி உறவினர்கள் திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பீகாரில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பீகார் மாநிலம், பகுசராய் நகரைச் சேர்ந்தவர் அவினாஷ். பட்டதாரி ஆன இவர் அந்த மாநிலத்தின் ஆசிரியர் தகுதித்தேர்வுக்குத் தயாராகி வந்த நிலையில் லகிசராய் நகரைச் சேர்ந்த குஞ்சம் என்பவர் பகுசராய் நகரில் உள்ள தனது அக்கா வீட்டுக்குப் படிக்க வந்தார்.

அப்போது அவினாசை சந்தித்துப் பழகி வந்தார். நாளடைவில் இது காதலாக மாறியது. சுமார் நான்கு ஆண்டுகளாக அவர்கள் இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். அவினாஷ் குஞ்சத்தைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று அவினாஷ் அரசு ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவினாஷிடம் குஞ்சம் கேட்டு உள்ளார். ஆனால், அவர்  திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குஞ்சம் இதுகுறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்தநிலையில் வழக்கம்போல் சனிக்கிழமை (டிசம்பர் 14) காலை பள்ளிக்கூடத்திற்கு அவினாஷ் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இரண்டு கார்கள் அவினாசை வழிமறித்து அவரைக் காருக்குள் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள கோவிலுக்குச் சென்றன. அங்கே தனது உறவினர்களுடன் மணக்கோலத்தில் இருந்த குஞ்சத்தைப் பார்த்து அவினாஷ் அதிர்ச்சியடைந்தார்.

அங்கு அவினாஷின் கால்களைக் கயிற்றால் கட்டிய உறவினர்கள் துப்பாக்கி முனையில் அவருக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர். அப்போது பெண்ணின் நெற்றியில் குங்குமத் திலகமிட மறுத்த அவினாஷை உறவினர்கள் அடித்து உதைத்த காணொளி இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருமணம் முடிந்த பிறகு அவினாஷ் வீட்டிற்குச் சென்ற குஞ்சத்தை மணமகனின் பெற்றோர் ஏற்க மறுத்து துரத்தி அடித்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *