உள்நாட்டு செய்தி
புத்தளம் பகுதியில் 20 வயது யுவதி ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு!
புத்தளம் , நவன்டான்குளம் பிரதேசத்தில் யுவதி ஒருவர் புகையிரத்தின் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற அலுவலகப் புகையிரதம் இன்று (16) காலை முந்தல் – நவன்டான்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தது.
இதன் போது, புகையிரத கடவைக்கு அருகே நின்றுகொண்டிருந்த இளம் யவதி திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
. புகையிரத்துடன் மோதுண்ட குறித்த யுவதியின் சடலத்தை புகையிரத அதிகாரிகள் புத்தளம் – பாலாவி புகையிரத நிலையத்தில் ஒப்படைத்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் யுவதியின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.