Connect with us

முக்கிய செய்தி

முட்டையின் விலை குறைப்பு !

Published

on

எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக முட்டையொன்றை சில்லறை விலையில் 30 முதல் 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

சராசரியாக 50 கிராமுக்கு குறைவான எடையுள்ள முட்டை 30 ரூபாய் முதல் 32 ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக
அந்த சங்கத்தின் தலைவர் என்டன் அப்புஹாமி தெரிவித்தார்.

55 கிராமுக்கு மேல் உள்ள பெரிய முட்டையை 33 ரூபாய் முதல் 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

“எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டையை 30 முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்.

எனவே, இன்று முதல் அனைத்து சில்லறை கடைகளிலும் முட்டையை 35 ரூபாய்க்கு குறைவாக விற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

2023 ஆம் ஆண்டு காலகட்டத்தில், ஒரு முட்டை 65-70 விலையில் இருந்தது.

ஆனால் முட்டை உற்பத்தி அதிகரித்து சந்தையில் இன்று விலை நிலையாக உள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் முட்டை உற்பத்தி உபரியாக உள்ளது.

50 கிராம் முட்டையை 30 ரூபாய் முதல் 32 ரூபாய்க்கு பெறலாம்.

55 கிராமுக்கு மேல் உள்ள முட்டைகள் ரூ.33,ரூ.34,ரூ.35 ஆகிய விலைகளில் வாங்கலாம்.

அதற்கு அதிகமாக விற்றால் அதனை வாங்க வேண்டாம்” என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் என்டன் அப்புஹாமி தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *