உள்நாட்டு செய்தி
கண்டியில் வாகன விபத்து- பாடசாலை மாணவி பலி!
கண்டியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி, வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் இன்று (16) தனியார் பேருந்துடன் தந்தையும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த 17 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த சிறுமி தந்தையுடன் மேலதிக வகுப்புக்கு சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.