உள்நாட்டு செய்தி
வீடொன்றினுள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்ட்டதில் தந்தையும் மகளும் படுகாயம்.!
மீட்டியகொட மஹவத்த பகுதியில் வீடொன்றினுள் வைத்து ஆண் மற்றும் பெண் ஒருவரை நேற்றிரவு (15) சிலர் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக மீட்டியகொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் பாலிமுல்ல, மீட்டியகொட பகுதியைச் சேர்ந்த 49 மற்றும் 29 வயதுடைய தந்தையும் மகளும் ஆவார்கள்.
முச்சக்கரவண்டியில் வந்த மூவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை, மீட்டியகொட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.