உள்நாட்டு செய்தி
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற வேன் விபத்து!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேன், கிளிநொச்சி உமையாள்புரம் A9 வீதியில் முச்சக்கரவண்டியுடன் வேன் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேனும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.