உள்நாட்டு செய்தி
ரயில் விபத்தில் இரு இளைஞர்கள் பலி…!
கல்பிட்டி – பாலாவிய பிரதான வீதியின் சேத்தாபொல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுரைச்சோலையிலிருந்து முந்தலம நோக்கி பயணித்த லொறி ஒன்றும் பாலாவியவில் இருந்து நுரைச்சோலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் 3 இளைஞர்கள் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மூவரும் கவலைக்கிடமான நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் இருவர் அனுமதிக்கும் போதே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இரு இளைஞர்களும் 27 மற்றும் 28 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.