உள்நாட்டு செய்தி
எரிபொருள் நெருக்கடி ஏற்பட வாய்ப்பில்லை !
நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லை என கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்று ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
யுனைடெட் பெற்றோலியம் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 30,000 மெற்றிக் தொன் எரிபொருளுடன் நாட்டை வந்தடைந்த கப்பல் மீள அனுப்பப்பட்டமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கப்பல் மீள அனுப்பப்படவில்லை, மீளச் சென்றுள்ளது.
அந்த கப்பலில் 15 மெற்றிக் தொன் பெற்றோலும் 15 மெற்றிக் தொன் டீசலும் இருந்துள்ளன.
உண்மையிலேயே இந்தக் கப்பல் கனியவள கூட்டுத்தாபனத்துக்கு எரி
பொருள் விநியோகிப்பதற்காக நாட்டுக்குள் பிரவேசிக்கவில்லை.
இந்த கப்பல் திரும்பிச் சென்றதன் காரணமாக இலங்கைக்கு எந்தவொரு
பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
நாட்டின் தேவைக்கு ஏற்ப எரிபொருள் தொகை காணப்படுகின்றது. ஆகவே, நெருக்கடி இன்றி எரிபொருளை விநியோகிக்க முடியும்’ என கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார்