உள்நாட்டு செய்தி
சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நாளை முதல் ஆரம்பம் !
2024 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நாளை முதல் ஆரம்பமாகின்றது.
இதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் வசந்த குணரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின்படி, சிவனொளிபாத மலை வளாகத்தில் தற்காலிக தங்குமிடங்களை அமைத்தல், பராமரித்தல், கட்டடங்கள் கட்டுதல், யாசகம் பெறுதல், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுச்சூழலுக்கு வெளியேற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாத்திரை காலம் அடுத்த வருடம் மே மாதம் 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.