வானிலை
வானிலை அறிக்கை!
தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தூத்துக்குடிக்கு கிழக்கே நூறு கிலோமீட்டர் தொலைவில் நிலை கொள்ளுகிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி குமரி கடல் வழியாக அரபிகடல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரபி கடலுக்கு செல்லும் வழியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் மோதி மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு கிழக்கு புறமாக உள்ள திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
நெல்லை மாவட்டத்தின் தெற்கு பகுதிகள் மற்றும் குமரி மாவட்டத்திலும் இப்போது மழை பெய்ய ஆரம்பித்து இருக்கிறது, இதன் தீவிரத் தன்மை எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் வலுவான மேகக் கூட்டம் இருக்கிறது .
மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்ப வாய்ப்பு இருக்கிறது.
டெல்டா பகுதியில் கரை ஒதுங்க வேண்டிய இந்த தாழ்வு மண்டலம தூத்துக்குடி பகுதிக்கு வந்ததன் காரணம் வட இந்தியாவில் இருந்து வீசிய குளிர் அலை தான்.
இன்னும் இதுபோன்று மூன்று நிகழ்வுகள் இருக்கிறது என்னும் நிலையில் வட இந்தியாவில் குளிரலை தாக்கம் கூடிக் கொண்டே வரும் நிலையில் அடுத்த நிகழ்வு தூத்துக்குடியை தாண்டி நெல்லை மாவட்டத்தில் ஏதாவது ஒரு கடற்கரையில் கரையை கடக்கலாம்.