உள்நாட்டு செய்தி
சிஐடியின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை நேற்று கைது செய்திருந்த நிலையில், இன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் சிறையில் அடைப்பு
2023 ஓகஸ்ட் மாதத்தில், அந்த பிரிவிற்கு வந்த முறைப்பாடு ஒன்று தொடர்பில் முறைப்பாட்டாளர் தரப்பிற்கு நன்மை பயக்கும் வகையில் செயற்பட்டதாகக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய நெவில் சில்வா தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அந்த விசாரணைகளில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா கடத்தல் மற்றும் சட்டவிரோதமான முறையில் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.