உள்நாட்டு செய்தி
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !
இவ்வருடத்தில் நவம்பர் மாதத்தில் 184,158 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,804,873 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்யா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சீனா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.