உள்நாட்டு செய்தி
2025 முதல் விளம்பரங்களுக்கு சிறுவர்களை பயன்படுத்த தடை!
2025 ஜனவரி முதலாம் திகதி முதல் விளம்பரங்களுக்கு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பயன்படுத்த தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் தொடர்பான வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று (6) நாடாளுமன்றத்தில் ஹசங்க விஜேமுனி இதனை தெரிவித்தார்.