உள்நாட்டு செய்தி
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு..!
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வா நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 286.09 ரூபாவாகவும், 294.69 ரூபாவாகவும் உள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 286.19 ரூபாவாகவும், 294.80 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
மத்திய கிழக்கு நாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்த அதேவேளை, ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக எதிராக பெருமளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.