உள்நாட்டு செய்தி
சிவனொளிபாதமலை யாத்திரிகளுக்கான அறிவிப்பு
சிவனொளிபாதமலை யாத்திரைக் காலத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு வரும் நபர்கள் மற்றும் குழுக்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சிவனொளிபாதமலை யாத்திரை ஒரு புனிதமான பயணம், சுற்றுலா அல்ல என்றும், பக்த்தர்கள் கோயிலுக்குச் செல்லும்போது மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மதுபானம் அல்லது போதைப்பொருட்களை சிவனொளிபாதமலை விகாரைக்கு கொண்டு வருவது ஏற்புடையதல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களும் யாத்திரையின் போது மதுபானம் அல்லது போதைப்பொருளை எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களின் வாகனங்களைச் சோதனையிட அவசரச் சாலைத் தடுப்புகளும் அமைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்