Connect with us

உள்நாட்டு செய்தி

உயர்தரப் பரீட்சை இன்று மீள ஆரம்பம்

Published

on

அனர்த்த நிலைமைகளினால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை, இன்று முதல் (4) முன்னதாகவே வெளியாக்கப்பட்ட பரீட்சை அட்டவணையின் அடிப்படையில் பரீட்சைகள் இடம்பெறும்.

இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக 27ஆம் திகதி முதல் பரீட்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

சீரற்ற கால நிலையால் இடை நிறுத்தப்பட்ட பரீட்சைகள், இம்மாதம் 21ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்