Connect with us

முக்கிய செய்தி

வாகன இறக்குமதி தொடர்பான IMF வின் முக்கியதீர்மானம்!

Published

on

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் உள்ள கையிருப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது நிதிக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மதிப்பீட்டிலும் முந்தைய மதிப்பீடுகளிலும் நாங்கள் அதைப் பற்றி விவாதித்தோம். வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான ஆதாரமாகவும் உள்ளது.

அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க வாய்ப்பு இருந்தாலும், நாட்டின் கையிருப்பில் கவனம் செலுத்தி அவதானமாக நிர்வகிக்க வேண்டும் என்றார்.