Connect with us

முக்கிய செய்தி

IMF உடனான 3ஆவது கடன் மீளாய்வுக் கூட்டம் வெற்றிகரமாக நிறைவு

Published

on

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் இலங்கை அரசாங்கம் சார்பில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெனாண்டோ உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்தது.