Connect with us

முக்கிய செய்தி

புதிய சபாநாயகராக அசோக ரங்வெல!

Published

on

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று வியாழக்கிழமை (21) சம்பிரதாயபூர்வமாக நடைபெறுவுள்ளது.

அணிவகுப்பு ஏதுமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் இடம்பெவுள்ள பாராளுமன்றித்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் முன்வைப்பார்.

அதேசமயம் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வெல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு வைபவரீதியாக ஆரம்பமான நிலையில், பத்தாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் ஜனாதிபதி பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு அறிவித்தார்.