உள்நாட்டு செய்தி
நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பில் பொலிஸார்!
பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வார காலத்திற்கு தேர்தலுக்கு பிந்தைய காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த காலப்பகுதியில் பொது இடங்களில் கூட்டங்கள், பேரணிகள் போன்றவற்றை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் நடமாடும் சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அடையாளம் காணப்பட்ட பொலிஸ் களங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.