Connect with us

election 2024

வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு

Published

on

இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்று (14) நடைபெறவுள்ளது.

வாக்காளர் அட்டை கிடைக்காமல், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருந்தால், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணத்தை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பின்வருபவை அதற்கு பொருந்தும்,

தேசிய அடையாள அட்டை
செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம்
அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை
வயோதிப அடையாள அட்டை
மதத்தலைவர்களுக்கான அடையாள அட்டை
தேசிய அடையாள அட்டை தகவலை உறுதிப்படுத்தும் கடிதம்

*மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை

*ஏனைய நபர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை

பொதுத்தேர்தலில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 64,000 ஆகும்.

2024 பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவை கண்காணிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்கள் இணைந்துள்ளனர்