வானிலை
வானிலை எச்சரிக்கை!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடலில் இன்று (12) தாழமுக்க வலயம் உருவாக வாய்ப்பு உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன் செல்வாக்கின் காரணமாக, நாளை (13) முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வளிமண்டல நிலைமைகள் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (12) வட மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் மாகாணங்களின் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி,மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்