உள்நாட்டு செய்தி
தோல் புற்றுநோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு..!
நாட்டில் கடந்த சில வருடங்களாக, தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக,
சரும நோய் தொடர்பான மருத்துவ நிபுணர் டாக்டர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.கொழும்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலே, அவர் இது தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
பல்வேறு வகையான அழகு சாதனப் பொருட்கள் தோல்களில் பயன்படுத்தப்படுவதும் இந்நோய்க்கு ஒரு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அழகு சாதனப் பொருட்கள் தோலை மென்மைப்படுத்துவதால், அதனூடாக சூரிய ஒளிக் கதிர்கள் தோலுக்குள் நேரடியாக ஊடுருவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
சருமத்தை ஆரோக்கியமாக பேணுவதற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது அவசியம்.
தோலில் ஏதாவது பாதிப்புக்கள் ஏற்படுமானால், முறையான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள வேண்டியது முக்கியம் என்றும் அவர் கேட்டுள்ளார்.
இத்தகைய சில அழகு சாதனப் பொருட்கள் பெருமளவில் இணையம் மூலமாகவே, விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.