உள்நாட்டு செய்தி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலு கூறுகையில்,
தற்போது முன்னாள் ஜனாதிபதிகள் குறிப்பாக திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க அவர்களின் பாதுகாப்பு நீக்கப்படும் என்று கூறியிருந்தார்கள். அவ்வாறு நீக்கம் செய்யப்படவில்லை.
அதை 30 ஆக குறைப்பதாக கடிதம் அனுப்பியிருந்தது தவறு. அவருக்கு இதுவரை 57 பேர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.