Connect with us

முக்கிய செய்தி

பயங்கரவாதச் சட்டம் தொடர்பான தனது கொள்கையை அரசாங்கம் மாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு

Published

on

சர்வதேச ரீதியாகவும் உள்ளூரிலும் கடும் கண்டனத்திற்கு உள்ளான கொடூரமான சட்டத்தை முற்றாக ஒழிப்பதாக வாக்குறுதியளித்த கட்சி, ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக வடக்கில் தமிழ் அரசியல் கட்சியொன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

“பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் என்று இதுவரை காலமும் கூறி
வந்த தேசிய மக்கள் சக்தி தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது என்பதும் கருத்தில்
கொள்ளப்பட வேண்டும். பயங்கரவாத தடுப்புச்சட்டம் முற்றாக நீக்கப்படுவதற்கு நாம் தொடர்ந்து
அழுத்தம் கொடுப்போம்.”

கடந்த வார இறுதியில், யாழ்ப்பாணம் தந்தை செல்வா மண்டபத்தில் வெளியிடப்பட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வில் கட்சியின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் ஸ்ரீதரன், கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் பங்கேற்கவில்லை பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில், இலங்கையின் ஏனைய மக்களுடன் தமிழர்கள் கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்ற விருப்பத்தையும் இலங்கை தமிழ் அரசு கட்சி நினைவு கூர்ந்துள்ளது.

“சர்வதேச நியமங்களின் படியும் சர்வதேச சாசனங்களின் பிரகாரமும் தமிழர்களாகிய நாங்கள் தனிச் சிறப்புமிக்க மக்கள் குழாமாவோம். ஒரு மக்கள் குழாமான நாங்கள் பேரினவாதத்தின் பிடிக்கு ஆட்படாது கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் நாட்டின் ஏனைய மக்களுடன் சமத்துவமுள்ள மக்களாக வாழ விரும்புகிறோம்.”

13 தவறு

பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய அதிகாரப் பகிர்வுக்காக தொடர்ந்து வாதிட்டு, அதற்காக இந்திய அரசின் ஆதரவைத் தொடர்ந்து கோரிவரும் தமிழரசுக் கட்சி, பொதுத் தேர்தலில் வேறு பாதையில் நுழைந்துள்ளது.

“தமிழ் மக்களை ஆளுகின்ற உரிமை கொழும்பிலிருக்கும் அரசாங்கத்திடம் அல்ல தமிழ் மக்களிடமே பொதிந்திருக்கின்றது. இதனடிப்படையில் மத்திய அரசிடமும் அதன் முகவரான ஆளுநரிடமும் அதிகாரங்களைக் குவிக்கின்ற 13ஆம் திருத்தச் சட்டம் முற்றிலும் பிழையானதொன்று.”

11 பக்கங்களைக் கொண்ட தமிழ் அரசுக் கட்சித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகாரப் பரவலாக்கல் வேலைத்திட்டம் வடக்கு கிழக்கு இணைப்புக் கட்டமைப்பிற்குள் தொடர்ந்து அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அது வடக்கு, கிழக்கில் வாழும் எந்தப் பிரிவினருக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“வடக்கு கிழக்கின் வரலாற்றுக் குடிகளான தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளில் நன்மைகளைப் பெற உரித்துடையவர்கள்.”

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் இன்னும் தீர்க்கப்படவில்லை எனவும் காணாமல் போனவர்களின் அலுவலகம் மற்றும் இழப்பீடு வழங்கும் அலுவலகம் ஆகியவை சட்டப்படி உருவாக்கப்பட்டிருந்தாலும் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை எனவும் வலியுறுத்தியுள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சி, இராணுவத்தில் சரணடைந்தும் காணாமல் போன பலருக்கு என்ன நடைபெற்றது என்ற கேள்வி இன்னமும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விடயங்களில் உண்மை கண்டறியப்பட வேண்டும் நீதி வழங்கப்பட வேண்டும் மற்றும் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்குள் நீதியை நிலைநாட்டுவதற்கு இலங்கை தமிழரசு கட்சி நம்பிக்கையுடன் செயல்பட்ட
போதிலும் அதன் முயற்சிகள் வெற்றிகரமாக அமையவில்லை எனவும், இப்பின்னணியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஒரு சுயாதீனமான சர்வதேச பொறிமுறையை தொடர்ந்து ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பெண்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் போன்ற மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள குழுக்களின் தேவைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் ஒரு விரிவான முழுமையான இழப்பீட்டுத்திட்டமொன்று வகுக்கப்பட வேண்டுமெனவும், திட்டத்தை உருவாக்கும் செயல்முறை பரந்த உள்ளடக்கமுடையதொன்றாக இருப்பதுடன் அது பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் சிவில் சமூகத்துடனான பரந்த ஆலோசனையுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.

போரில் குடும்ப உறுப்பினர்களையும் அன்புக்குரியவர்களையும் இழந்த அனைவருக்கும் அவர்களை நினைவு கூற உரிமை உண்டு என்பதோடு, அது உறுதிப்படுத்தப்பட வேண்டுமென தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான 30/1 எனப்படும் தீர்மானம் முழுமையாக இருக்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) குறிப்பிட்டுள்ளது.

“அரசாங்கத்தின் இணை அனுசரணையின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தின் 30/1, 34/1 மற்றும் 40/1 தீர்மானங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.”