முக்கிய செய்தி
மலையக பாடசாலைகளை தரமுயர்த்த இந்திய அரசாங்கம் கடன் உதவி இரட்டிப்பாக்கம்!
பெருந்தோட்டத்துறையில் 9 பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கு இந்திய அரசாங்கம் தங்களின் கடன் உதவியை முறைப்படி இரட்டிப்பாக்கியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிக்கையில்,
‘ மொத்தம் 600 மில்லியன் ரூபாய் இரட்டிப்பு உதவிக்கான இந்த ஒப்பந்தம், கடந்த ஆண்டு 2023 நான் அமைச்சராக இருந்த காலத்தில் உறுதியளித்த திட்டங்களின் பயனாகும்.
பாடசாலைத் திட்டங்கள் நிறைவடைந்தவுடன், பெருந்தோட்டத்துறை மாணவர்களின் வாழ்வில் அவை மாற்றியமைக்கும் சிந்தனையை ஏற்படுத்தும்.
நான் ஒன்றறை வருடங்களாக அமைச்சரவை அமைச்சராக எனது பணியின் அடிப்படையானது பெருந்தோட்ட சமூகத்தினருக்கு சிறந்த கல்வி வசதிகளை மேம்படுத்துவதாகும். நீண்ட கால விடுதலை என்பது கல்வியால் மட்டுமே சாத்தியமாகும்.
இந்தியவின் STEM ஆசிரியர் பயிற்சித் திட்டம் மற்றும் நாங்கள் தொடங்கிய தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமாக மேம்படுத்தப்பட்டதைக் குறிப்பிட்டு, இந்திய அரசு இந்த முயற்சிகளை அவர்களின் செய்திக்குறிப்பு மூலம் அங்கீகரிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இத்திட்டமானது எதிர்வரும் மாதங்களில் தொடங்கப்படும். 2.6 பில்லியன் ரூபாய் (INR. 750m) மானியத்தை இந்தியா கடந்த ஆண்டு வழங்க உறுதியளித்திருந்தது.
பெருந்தோட்ட சமூகம் மற்றும் அனைத்து இலங்கையர்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து ஆதரவளிக்கும் GOI மற்றும் இந்திய அரசிற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் ‘ என தெரிவித்துள்ளார்.