உள்நாட்டு செய்தி
விபச்சார விடுதி ஒன்றிலிருந்து ஐந்து பெண்கள் கைது!
கொழும்பு கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து ஐந்து பெண்கள் கைதாகியுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர். கல்கிசை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான பெண்களில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். பிலியந்தலை, வென்னப்புவை, பனாதர, இரத்மலானை மற்றும் மடபாத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21, 22, 24, 39 மற்றும் 41 வயதுடைய ஐந்து பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.