முக்கிய செய்தி
யாழ்ப்பாணத்தில் மொட்டுக் கட்சி சார்பில் போட்டியிடும் தமிழர்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
நாட்டில் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் யாழ்ப்ப்பாண மாவட்டத்தில் மொட்டுக் கட்சியின் சார்பில் காசிலிங்கம் போட்டியிடவுள்ளார்.
கீதாநாத் காசிலிங்கம் வேட்பு மனுக்களில் கையொப்பமிடும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உடனிருந்துள்ளார்.
இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச இருந்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராக கீதாநாத் காசிலிங்கம் பணியாற்றினார்.