உள்நாட்டு செய்தி
இடைத்தரகர்கள் இல்லாவிடின் முட்டை விலை குறைய வாய்ப்பு!
முட்டை விலை அதிகரிப்பிற்கு இடைத்தரகர்களே காரணம் என்றும் அரசாங்கம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுத்தால், 30 ரூபாவுக்கு மீண்டும் முட்டையை விற்பனை செய்ய முடியும் எனவும் முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர் .
உற்பத்தியாளர்களிடமிருந்து முட்டையை கொள்வனவு செய்து, இடைத்தரகர்கள் களஞ்சியப்படுத்தி வைத்துள்ளனர். இவை, சந்தைக்கு விடப்படாத காரணத்தாலேயே முட்டை விலை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் இந்த இடைத்தரகர்கள் தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து முட்டை விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எடுத்தால் முப்பது ரூபாவுக்கு மீண்டும் முட்டையை வழங்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், சந்தையில் 28 ரூபா முதல் 32 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட முட்டை, தற்போது 40 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டில் தேவையான அளவில் முட்டை உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
அவர்கள் இது தொடர்பில் தெரிவிக்கையில், இடைத்தரகர்கள் முட்டைகளைப் பெற்று களஞ்சியப்படுத்துவதாலேயே இந்த விலை அதிகரிப்பு ஏற்படுகிறது என்றனர்.