உள்நாட்டு செய்தி
சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரிப்பு…!
சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது. சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் தெரிவித்தனர்.
கடந்த காலத்தில் ஒரு தேங்காய் 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டது.
இதேவேளை, கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில பகுதிகளில் முட்டை விலை 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.