உள்நாட்டு செய்தி
மஹிந்தவின் காணியிலிருந்து மின் வயர்கள் அகற்றம்!
வீரகெட்டிய தங்கல்ல வீதியில் அமைந்துள்ள காணியொன்றில் பல முறை மின்சார விநியோகத்தை துண்டிப்பதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
குறித்த காணியானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என தெரியவருகிறது.
அங்கு பொருத்தப்பட்ட வயர்களை பல முறை அகற்றுவதற்கு மின்சார சபை ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்