உள்நாட்டு செய்தி
தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் வேண்டாம்..!
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி சில்வா முன்னதாக முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு தேங்காய் எண்ணெயை கொண்டு வரும் போது உணவு பாதுகாப்பு பிரிவின் உணவு பரிசோதகர்கள் மற்றும் இலங்கை தர நிர்ணய பணியகத்தின் அதிகாரிகள் இணைந்து,
இந்த தேங்காய் எண்ணெயின் தரம் குறித்து முழுமையான ஆய்வுகளை மேற்கொள்கின்றனர் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.