உள்நாட்டு செய்தி
இரு வாரங்களில் பொருட்களின் விலை குறைய வாய்ப்பு…!
நாட்டில் எதிர்வரும் இரு வாரங்களில் பொருட்களின் விலை குறைவடைவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததுள்ளமையினால் அதன் பலனை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.