முக்கிய செய்தி
IMF நீடிக்கப்பட்ட கடன் திட்டம் : 03ஆவது மீளாய்வு ஆரம்பம்!
சர்வதேச நாணய நிதியத்துடன் அமுல்படுத்தப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் திட்டத்தின்
மூன்றாவது மீளாய்வுக்கான காலம் அறிவிக்கப்படுமென
சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு துறையின் பணிப்பாளர் ஜூலி கோசாக்
தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான உயர்மட்டக் குழு, தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதுடன், இவர்கள் ஜனாதிபதி மற்றும் அவரது புதிய பொருளாதார குழுவை சந்தித்துள்ளனர்.
பிரதிநிதிகள் குழு அதிகாரிகளுடன் சமீபத்திய பொருளாதார முன்னேற்றங்கள்
மற்றும் அவர்களின் பொருளாதார சீர்திருத்த நோக்கங்கள் குறித்து இவர்கள் கலந்துரையாடியுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல்
தொடர்புதுறையின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்த அவர்,
இந்தத் திட்டத்தின் கீழ் மூன்றாவது மதிப்பாய்வின் திகதிகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.
தூதுக்குழுவினரின் வருகைக்குப் பின்னர் இதுதொடர்பாக அறிவிக்கப்படும் எனவும்
நிகழ்ச்சியின் செயற்றிறன் வலுவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பது, பணவீக்கத்தை குறைப்பது, இருப்புக்களை அதிகரிப்பது மற்றும் வருமான சேகரிப்பை மேம்படுத்துவது போன்றவற்றினாலான சீர்திருத்த முயற்சிகள் பலன்களை அளிக்கக்கூடியவகையில் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று சபை 2024 ஆம் ஆண்டின் பிரிவு IV ஆலோசனை மற்றும் இரண்டாவது மதிப்பாய்வை இலங்கையுடனான விரிவாக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் நிறைவு செய்துள்ளதுடன், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்காக சுமார் 336 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன.
நிரல் செயற்றின் வலுவாக இருப்பதுடன் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல் பணவீக்கத்தை குறைக்கவும், இருப்புக்களை அதிகரித்தல் மற்றும் வருமான திரட்டலை
மேம்படுத்தல் போன்ற விடயங்களில் மறுசீரமைப்பு முயற்சிகள் பயனளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது