உள்நாட்டு செய்தி
வெள்ளவத்தை கடற்கரையில் ஆணொருவரின் சடலம்
கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் இன்று (03) பிற்பகல் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 45 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் 05 அடி 04 அங்குலம் உயரமுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.