முக்கிய செய்தி
லிட்ரோ எரிவாயு விலை திருத்தம்…!
ஒக்டோபர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் எதுவுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 3, 690 ரூபாவாகவும் 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1, 482 ரூபாவாகவும் 2 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகவும் உள்ளன.
முன்னதாக லிட்ரோ நிறுவனம் இந்த ஆண்டு நான்கு தடவைகள் விலைகுறைப்பை அறிவித்திருந்தது.இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக சன்ன குணவர்தன இன்றையதினம் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது