உள்நாட்டு செய்தி
குடிவரவு குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் நியமனம்….!
குடிவரவு குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் பீ.எம். டீ. நிலுசா பாலசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
குடிவரவு குடியகல்வு முன்னாள் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் அய்.எஸ்.எச். ஜே இலுக்பிட்டிய உயர்நீதிமன்ற உத்தரவின் கீழ் கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குடிவரவு குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளராக பீ.எம். டீ. நிலுசா பாலசூரியவை நியமிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.