Connect with us

உள்நாட்டு செய்தி

கொழுப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…!

Published

on

கொழும்பு கொட்டாவை அதிவேக வீதிக்கு அருகில் மிஹிந்து மாவத்தை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றிலிருந்து  ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (01) பிற்பகல் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 50 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் இவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனவும் சடலமாக மீட்கப்பட்டவர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *