Connect with us

வானிலை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை…!

Published

on

   நாட்டில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *