Connect with us

முக்கிய செய்தி

புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று!

Published

on

ஜனாதிபதி அனுர தலமையிலான இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டம் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடக்கவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகிய மூவரும் பங்கேற்கவுள்ளனர்.  

  இதன்போது புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டைப் பாதிக்கும் பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், பொது பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சு, சுற்றுச்சூழல், வனவிலங்கு, வன வளங்கள், நீர் வழங்கல், தோட்டம் மற்றும் சமூக உள்கட்டமைப்பு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாண மற்றும் புத்த சாசனத்தின் செய்தித் தொடர்பாளராக மதம் மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் , புதிய அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் நாளைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.