முக்கிய செய்தி
நாமல் ராஜபக்ஷ மீது முறைப்பாடு….!
இலங்கை மின்சார தனியார் கம்பனியின் நலன்புரி திணைக்களத்திற்கு சொந்தமான மொண்டேரோ ஜீப் வாகனம் ஒன்று, ஜனாதிபதி வேட்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பிரசார நடவடிக்கைகளுக்கு, பழுதுபார்ப்பதற்காக அனுப்பிவைக்கப்படும் எனக் கூறி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
நாமல் ராஜபக்ச தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கடந்த 27ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிஸார் கோட்டை நீதவான் தனுஜா லக்மாலிக்கு அறிவித்துள்ளனர்.