Connect with us

முக்கிய செய்தி

ஜனாதிபதி எடுத்த அதிரடி நடவடிக்கை!

Published

on

நாட்டில் உயரடுக்கு பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் 2 ஆயிரம் அதிகாரிகளை சாதாரண பொலிஸ் சேவையில் இணைக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும், பல ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் இருந்த பின்னர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அமைச்சர்கள், உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை நீக்குவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்காலத்தில் அமைச்சர்களுக்கான உயரடுக்கு பாதுகாப்பை வரம்பற்ற முறையில் பயன்படுத்துவதை நிறுத்த அநுர குமார திசாநாயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.