உள்நாட்டு செய்தி
சிறுமியின் உடலில் சூடு வைத்த கொடூர தாய்!
கண்டி பகுதியில் முன்பள்ளிக்கு செல்ல மறுத்த சிறுமியை தீக்காயங்களுக்கு உள்ளாக்கிய தாயொரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கண்டி, நாகஸ்தென்ன பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாய் கரண்டியை சூடாக்கி சிறுமியின் உடலில் தீக்காயங்களை ஏற்படுத்தியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
காயமடைந்த சிறுமி தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.