உள்நாட்டு செய்தி
காட்டு யானையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!
கண்டி – மஹியங்கனை பகுதியில் காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவி்துள்ளனர்.இந்த சம்பவம் இன்றையதினம் (29-09-2024) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் திக்கொட சேரானகம பகுதியை சேர்ந்த 80 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
காட்டுயானை தாக்கிய பெண் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.