உள்நாட்டு செய்தி
வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
\
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வாகன இறக்குமதி தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தபோது வெளிநாட்டுக் கையிருப்பின் அடிப்படையில் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாணய கொள்கை மீளாய்வு குறித்து மத்திய வங்கியில் இன்றையதினம் (27-09-2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பரிந்துரைகளைத் தற்போது மற்றுவதற்கான காரணம் எதுவும் இல்லை எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.