Connect with us

உள்நாட்டு செய்தி

லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் பதவி விலகல்!

Published

on

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.கடிதம் மூலம் இந்த பதவி விலகலை  அவர் அறிவித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.மேலும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி  வரை எரிவாயு தட்டுப்பாடு இருக்காது என்றும் முதித பீரிஸ் சுட்டிக்காட்டியிருந்தார். 

இதேவேளை, கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில், எரிவாயு கொள்வனவு தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டபோது  இதற்கு முன்னர் லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் அந்த பதவியில் இருந்து விலகிச் சென்றிருந்தார்.

அதனையடுத்து குறித்த பதவிக்கு, 2022 ஜூன் 13ஆம் திகதி முதித பீரிஸ் தெரிவானார்.

மேலும், அதற்கு முன்னர் லிட்ரோ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது,

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *