உள்நாட்டு செய்தி
பாராட்டு தெரிவித்துள்ள கண்காணிப்பு குழுக்கள்…!
ஜனாதிபதித் தேர்தல் அமைதியாகவும், பெரிய வன்முறைச் சம்பவங்களோ, இடையூறுகளோ இன்றியும் நடைபெற்றதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், தேர்தலை வெற்றிகரமாக முடிக்க உதவிய தேர்தல் ஆணையகம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரை அவர்கள் பாராட்டியுள்ளனர். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பின் தகவல்படி, நேற்று 108 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எனினும், அதில் எதுவுமே பாரதூரமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.