Election 2023
ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட மாட்டாது….!
ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட மாட்டாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கூறியுள்ளார். வாக்களிப்பு நடவடிக்கை நேற்றைய தினம் காலை 7மணி முதல் மாலை 4மணி வரையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பிற்பகல் 5 மணியாகும் போது வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகியிருந்தன.
இவ்வாறான சூழலில் நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 10 மணியில் இருந்து இன்று காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
அதேநேரம் இன்று காலை ஊரடங்கு உத்தரவானது இன்று மதியம் 12 மணி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே தற்போது ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.