Election 2023
தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் நிறைவு..!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.
4 மணியுடன் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த நிலையில், குறித்த சந்தர்ப்பத்தில் வரிசையில் நின்றிருக்கும் அனைவருக்கும் வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்படுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது