உள்நாட்டு செய்தி
தொடருந்து தடம் புரண்டதால் போக்குவரத்து தடை
தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மஹவவில் இருந்து கோட்டை வரை பயணித்த அலுவலக தொடருந்து தடம் புரண்டதால் இவ்வாறு தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ராகம தொடருந்து நிலையத்திற்கு அருகில் குறித்த தொடருந்து தடம் புரண்டதால் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் தொடருந்து பாதையும் சேதமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.